சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தஷிரோ (சுமோ), விடிவி கணேஷ், யோகி பாபு நடிக்கும் படம், சுமோ (மல்யுத்த வீரர்). ஒளிப்பதிவு, ராஜீவ் மேனன். இசை, நிவாஸ் கே.பிரசன்னா. திரைக்கதை, வசனம்: சிவா. இயக்கம், ஹோசிமின். படம் குறித்து அவர் கூறியதாவது: இப்படம் இந்தியா-ஜப்பான் கூட்டுத்தயாரிப்பு. ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அங்கு பாடல்களை படமாக்குவது சுலபம் அல்ல. அந்நாட்டு அரசாங்கமும், தூதரகமும் உதவி செய்ததால், பிரச்னை இல்லாமல் படப்பிடிப்பு நடத்தினோம்.