சூர்யா 46 படத்தில் இணையும் பவானிஸ்ரீ

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். தற்போது ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார் .

மேலும், ராதிகா சரத்குமார், பாலிவுட் நடிகை ரவீணா டண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ‘ஆளவந்தான்’ படத்திற்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து ரவீனா டண்டன் இப்படத்தில் இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானிஸ்ரீ இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானிஸ்ரீ ‘பாவக்கதைகள்’ என்ற ஆந்தாலஜி படத்திலும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

 

Related Stories: