முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார், அனீஸ் அஷ்ரஃப். கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்து, ரசிகர்களை பதற வைத்திருக்கிறார் வெற்றி. தம்பி ராமய்யா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். ஷில்பா மஞ்சுநாத்துக்கு அதிக வேலையில்லை. ரெடின் கிங்ஸ்லி காமெடி செய்திருக்கிறார். சைக்கோ வில்லனாக வரும் மகேஸ் தாஸ் கொடூரமாக நடித்துள்ளார்.
அரவிந்த் ஒளிப்பதிவும், ஏஜேஆரின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவியுள்ளன. கொலைகளுக்கான சஸ்பென்ஸ் நீடித்தாலும், போலீசாரை காமெடியாகவே சிந்திக்க வைத்திருப்பதும், வெற்றியின் புலனாய்வு திறமை ஒரேமாதிரி இருப்பதும் பலவீனம். காட்சிகளில் இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
