லாஸ்ஏஞ்சல்ஸ்: தி கிங் ஆப் பாப் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, இப்போதும் கொண்டாடப்படும் பிரபலம்தான் மைக்கேல் ஜாக்சன். நிறைய இசை ஆல்பங்களை வெளியிட்டவர் இசைக் கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். 1997ம் ஆண்டு பிரான்ஸில் மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அப்போது அவர் பயன்படுத்திய சாக்ஸ் ஒப்பனை அறையில் கிடந்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக எடுத்து வைத்துள்ளனர்.
அந்த சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட்ட நிலையில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் அதனை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை, சுமார் ரூ. 3 கோடிக்கும், அவர் அணிந்திருந்த தொப்பி, கடந்த 2023ம் ஆண்டு சுமார் ரூ. 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.