இந்நிலையில் கலாபவன் நவாஸ், பிரகம்பனம் என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு எர்ணாகுளம் அருகே உள்ள சோட்டானிக்கரையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதனால் சோட்டானிக்கரையில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார். நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதனால் நேற்று ஆலுவாவில் உள்ள வீட்டுக்கு செல்ல கலாபவன் நவாஸ் திட்டமிட்டிருந்தார். மாலையில் அறையை காலி செய்வதாக ஓட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். இரவாகியும் அறையை காலி செய்யாததால் ஓட்டல் ஊழியர்கள் போன் செய்தனர். ஆனால் கலாபவன் நவாஸ் போனை எடுக்கவில்லை.
சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அறைக்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கலாபவன் நவாஸ் தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் கலாபவன் நவாஸ் இறந்து விட்டதாக கூறினர். சோட்டானிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். நவாசிற்கு நடிகை ரெஹ்னா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
