ஜோடியுடன் ஹீரோயின் கேபிள் கார் ரைடு

பிரபாஸின் சாஹோ படக்குழு ஆஸ்டிரியா நாட்டின் பனிப்பிரதேசங்களில் படப் பிடிப்பை முடித்துவிட்டு பனி மலையில் கொண்டாட்டம் போட்டனர். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு அந்தரத்தில் செல்லும் கேபிள் காரை கண்டதும் பட ஹீரோயின் ஷரத்தாவுக்கு அந்தரத்தில் பறக்கும் ஆசை துளிர்விட்டது.

அதை புரிந்து கொண்ட பிரபாஸ், கேபிள் காரில் ஷரத்தாவை அழைத்துச் சென்றார். கேபிள் காரின் கண்ணாடி வழியாக பனி மலை முகடுகளை ஷரத்தா ரசித்து வியந்தார். பிரபாஸ், ஷரத்தாவின் ஜாலியான கேபிள் கார் ரைடை அருகிலிருந்த ஷரத்தாவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் நிகிதா மேனன் செல்பி படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories: