கல்லூரி சீனியர் மீது நடிகை தேஜூ அஸ்வினிக்கு காதல்

‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தேஜூ அஸ்வினி. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தேஜூ அஸ்வினி அளித்த பேட்டியில் தனது கல்லூரி காதல் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது: ‘‘சினிமாவுக்கு நான் வந்தது எதிர்பாராதது. நண்பர்கள் மூலமாக யூ டியூப்பில் ஒரு குறும்படம் நடித்தேன். அதில் கிடைத்த வரவேற்பு, என்னை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டது. நான் ரொம்ப ஜாலியான ஆள். துறுதுறுவென இருப்பேன். சும்மா இருக்கவே எனக்கு பிடிக்காது. என் அருகில் உள்ளவர்களை ஓய்வு எடுக்கவே விடமாட்டேன்.

நான் ஓயாத அலை போன்றவள். என்னை தடுக்க யாராலும் முடியாது. படிக்கும் காலத்திலேயே என் அக்கா காதல் வசப்பட்டுவிட்டாள். இதனால் பெற்றோர் என்னை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தனர். பள்ளி, வீடு, கல்லூரி இதுமட்டும் தான் எனது வாழ்க்கையாக இருந்தது. அதனால் காதலுக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. கல்லூரியில் படிக்கும்போது சீனியர்கள் மீது ஒரு கிரஷ் இருந்தது. ‘பேமிலி மேன்’ படத்தில் வரும் சமந்தா போல ஆக் ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். கதைக்கு அவசியம் என்றால், முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன்’’ என்றார்.

Related Stories: