50 வயதில் கலக்கும் சோனாலி பிந்த்ரே

இந்தியில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான ‘ஆக்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. தமிழில், 1995ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ என்ற பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். அதன்பிறகு கதிர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான ‘காதலர் தினம்’ படத்தில் குணால் ஜோடியாக நடித்து பிரபலமானார். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. பிறகு, அர்ஜூனுடன் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த சோனாலி பிந்த்ரே அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 4 ஆண்டுகால சிகிச்சைக்கு பிறகு 2021ல் கேன்சரில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்தார். தற்போது மீண்டும் படங்கள், வெப் தொடர்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அவ்வபோது போட்டோஷூட் செய்து வரும் சோனாலி பிந்த்ரே சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. பிங்க் நிற புடவையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ள சோனாலி பிந்த்ரேவை பார்த்த நெட்டிசன்கள் ‘‘உங்களுக்கு 50 வயதா? நீங்கள் இப்போதும் ஹீரோயினாக நடிக்கலாம்’’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: