2007ல் வெளியான ‘தாரே ஜமீன் பர்’ என்ற படத்தின் சீக்குவலாக உருவாக்கப்பட்ட ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படம், அசத்தலான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. உலக அளவில் 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் மற்றும் முக்கிய மொழிகளில் சப்-டைட்டில், டப்பிங் வசதி வழங்கப்படுகிறது. இனி ஆமிர் கான் நடிக்கும் படங்கள் யூடியூப்பிலும் வெளியாகும். இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான ஆமிர் கான் கூறுகையில், ‘திரைப்படம் என்பது அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
மக்கள் விரும்பிய இடத்தில் இருந்தபடியே எப்போது வேண்டுமானாலும் படத்தை பார்த்து ரசிக்கலாம். திரைத்துறையில் நுழையும் இளம் படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்’ என்றார். ‘சித்தாரே ஜமீன் பர்’ கதையை திவி நிதி சர்மா எழுத, கோலிவுட் டைரக்டர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார்.
