தீபாவளியை முன்னிட்டு தமிழக ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் 1,700 காவலர்கள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,700 காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் மூலம் செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு, காவல்துறை கூடுதல் இயக்குனர் (இருப்புப்பாதை) வனிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே பாதுகாப்பு படையின் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள  ரயில்நிலையங்களில் 7 துணை கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 80  உதவி ஆய்வளர்கள் மற்றும் 1,600 காவலர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 1,700 பேர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். …

The post தீபாவளியை முன்னிட்டு தமிழக ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் 1,700 காவலர்கள்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: