பருவ மழையை எதிர்கொள்ள அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்: மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு அறிவுரை

திருவொற்றியூர்: பருவ மழையை எதிர்கொள்ள குடிநீர் மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகள்  இணைந்து பணியாற்ற வேண்டும் என மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 14 வார்டுகளில்  மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் வழங்கல் வாரியம் செய்ய  வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். அப்போது, பருவ மழையின்  போது பொதுமக்களுக்கு தங்கு தடை இல்லாமல் குழாய் மற்றும் லாரிகள் மூலம்  குடிநீர் விநியோகிக்கவும், பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் அடைப்பு ஏற்படாமல்  செல்லக்கூடிய வகையில் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் பொறியியல்  பிரிவு அதிகாரியுடன் இணைந்து வரக்கூடிய பருவ மழையை எதிர்கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்  என்று தி.மு.தனியரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், குடிநீர் வழங்கல்  வாரிய செயற்பொறியாளர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post பருவ மழையை எதிர்கொள்ள அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்: மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: