பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி பஸ் நிலையம், பொது இடங்களில் இரவு நேரங்களில் பஸ் நிற்க தடை-குடியாத்தத்தில் போலீஸ் கண்காணிப்பு

குடியாத்தம் :  கோவை பாஜ அலுவலகம் மீது பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக குடியாத்தம், பஸ்நிலையம் மற்றும் பொது இடங்களில் இரவு நேரங்களில் பஸ்கள் நிற்க போலீசார் தடைவிதித்துள்ளனர். கோவை பாஜ அலுவலகம் மீது நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜ அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகள் வீடுகள் முன்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் வேலூர் மாவட்ட பாஜ துணை தலைவர் காந்த் வீடு, குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதி,  மற்றும் மசூதி ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மேலும், குடியாத்தம் புதிய, பழைய பஸ் நிலையங்கள், பொது இடங்களில் பஸ், லாரி, கார், வேன் ஆகியவை இரவு நேரங்களில் நிற்க போலீசார் தடை விதித்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு  பஸ் நிலையத்திற்குள் வந்த பஸ்களை உள்ளே நிறுத்த வேண்டாம் என டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். மேலும் குடியாத்தத்தில் தனிப்பிரிவு, உளவுத்துறை போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தகவல் சேகரித்து வருகின்றனர்….

The post பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி பஸ் நிலையம், பொது இடங்களில் இரவு நேரங்களில் பஸ் நிற்க தடை-குடியாத்தத்தில் போலீஸ் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: