மாமனாரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய மருமகனுக்கு வலை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன்(60). இவரது மூத்த மகள் ராக்கம்மாள்(30). இவரது கணவர் ராமச்சந்திரன். கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். ராமச்சந்திரன், தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து ராக்கமாளை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் 2 தினங்களுக்கு முன்பு ராக்கம்மாள் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று, ராமச்சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்துவது குறித்து கூற ராக்கம்மாள் சென்றுள்ளார். இதனையறியாத அவரது 20 வயது தங்கை (திருமணமாகவில்லை) ராக்கம்மாளின் வீட்டிற்கு சென்றார். அங்கு ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் ராக்கம்மாளை ஏன் தினமும் அடித்து துன்புறுத்துகிறீர்கள் என்று ராமச்சந்திரனிடம் அவர் வாக்குவாதம் செய்தார். ராக்கம்மாள் வீட்டிற்கு இளையமகள் சென்றதையறிந்த நாகப்பன் உடனடியாக அங்கு சென்றார். அப்போது நாகப்பனுக்கும், ராமச்சந்திரனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகப்பன், நாகப்பனின் இளைய மகளை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்துவிட்டு, நாட்டு துப்பாக்கியுடன் வெளியில் வந்தார். தொடர்ந்து நாகப்பனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினார். ராமச்சந்திரன் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் நாகப்பனின் விலா பகுதியில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் காயமடைந்த நாகப்பனை மீட்ட அக்கம்பக்கத்தினர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தப்பியோடிய ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்….

The post மாமனாரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய மருமகனுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: