ஹீரோயின்கள் தோற்றத்தை மட்டும் பார்ப்பதா?.. அபர்ணா பாலமுரளி கோபம்

சென்னை: ஹீரோயின்களின் தோற்றத்தை மட்டும் கேலி செய்பவர்கள், ஹீரோக்களை ஏன் கண்டுகொள்வதில்லை என நடிகை அபர்ணா பாலமுரளி கேள்வி எழுப்பினார். தமிழில் சர்வம் தாள மயம், சூரரைப் போற்று, தீதும் நன்றும், வீட்ல விசேஷம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவருக்கு திடீரென சற்று உடல் எடை கூடியது. இதையடுத்து அவரை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கேலி செய்தனர். இது பற்றி அபர்ணா பாலமுரளி கூறியது:ஒருவரின் எடை அதிகரிப்பது என்பது அவரின் உடலில் உள்ள பிரச்னைகள் காரணமாக ஏற்படுகிறது. நான் இப்படி குண்டாக இருந்தாலும் இதே தோற்றத்துடன் என்னை படத்தில் நடிக்க அழைப்பவர்கள் ஏராளம். ஆனாலும் சிலர் ஒல்லியான நடிகைகளை மட்டுமே ஹீரோயின்களாக பார்க்கிறார்கள்.  தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் பலரின் திறமைக்கு முன்னால் தோற்றம் ஒரு பொருட்டே அல்ல. ஹீரோக்களுக்கு மட்டும் இவ்வாறு பாகுபாடு பார்க்காத சினிமாவில், ஹீரோயின்களுக்கு என்று வந்தவுடன் உடல் தோற்றத்தை பார்க்கிறார்கள். ரசிகர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. …

The post ஹீரோயின்கள் தோற்றத்தை மட்டும் பார்ப்பதா?.. அபர்ணா பாலமுரளி கோபம் appeared first on Dinakaran.

Related Stories: