மதுராந்தகம் நகராட்சியில் தூய்மை இயக்கம் சார்பில் கூட்டு சுகாதார பணிகள்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், மாபெரும் கூட்டு சுகாதார பணிகள் நடைபெற்றன. இதில், நகரமன்ற தலைவர் மலர்விழிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். மதுராந்தகம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் கூட்டு சுகாதார மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகரமன்ற தலைவர் மலர்விழி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அருள் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு, மாபெரும் கூட்டு சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.மேலும், மதுராந்தகம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சுற்று சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழித்து அகற்றினர். பேருந்து நின்று செல்லும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர். குப்பைகளை அகற்றினர். இதை தொடர்ந்து என் குப்பை, என் பொறுப்பு, எனது நகரம் என் பெருமை என உறுதிமொழி ஏற்றனர். மேலும், வெண்காட்டீஸ்வரர் கோயில் தெரு, பார்த்தசாரதி தெரு, வன்னியர்பேட்டை, சாய்ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர முட்புதர்களை அகற்றினர். கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டதில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்….

The post மதுராந்தகம் நகராட்சியில் தூய்மை இயக்கம் சார்பில் கூட்டு சுகாதார பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: