ஒன்றியத்தில் ஆட்சி மாறுவதே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: நீட் தேர்வில் ஏற்படும் குழப்பங்கள், கெடுபிடிகள், குளறுபடிகள் என அனைத்திற்கும் ஒன்றிய ஆட்சி மாற்றம் மட்டுமே தீர்வு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரஷ்ய அறிவியல், கலாச்சார மையம் மற்றும் வெளிநாட்டு கல்வி ஆலோசகர்கள் நடத்தும் ரஷ்ய கல்வி கண்காட்சி-2024 நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்யாவில் 63 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த 50-60 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். தூத்துக்குடியில் நீட் தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் நேரில் சென்று ஆய்வு செய்யவும், அது குறித்து கருத்து தெரிவிக்கவும் முடியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவதுதான். ஆட்சி மாற்றம் நிகழும்போது நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றியத்தில் ஆட்சி மாறுவதே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: