அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும்‌, விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர் மீண்டும் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம். அதன்படி, பள்ளி மாணவர்கள் அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று மே 16ம் தேதி (வியாழக்‌கிழமை) முதல் ஜூன் 1 (சனிக்‌கிழமை) வரையிலான நாளில்‌ (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் மே 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் (சர்வீஸ் சென்டர்) வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல் முதன்முறையாக அனைத்து தேர்வுகளையும் எழுத இருப்பவர்கள், ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், மற்றும் ஏப்ரல்-2024 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மே 16ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று, கட்டணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் கூடுதல் விவரங்களை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ சென்று அறிந்துகொள்ளலாம்‌. மேலும்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌, அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாகவும்‌ அறிந்து கொள்ளலாம்‌.

பத்தாம்‌ வகுப்பு
தேர்வுக்கட்டணம்‌
தேர்வுக்கட்டணம் ரூ. 125
ஆன்‌லைன்‌
பதிவுக்‌கட்டணம் ரூ. 75
மொத்தம் ரூ. 195
தேர்வுக்‌கட்டணம்‌ மற்றும்‌ ஆன்‌லைன்‌ பதிவுக்‌கட்டணத்தினை சேவை மையத்தில்‌ / பள்ளியில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

துணைத்தேர்வுக்கான
அட்டவணை
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் தாள் I ஜூலை 2
ஆங்கிலம் தாள் II ஜூலை 3
கணிதம் III ஜூலை 4
அறிவியல் III ஜூலை 5
விருப்பமொழிப் பாடங்கள் IV ஜூலை 6
சமூக அறிவியல் III ஜூலை 8

The post அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: