அருள் தரும் ஐயப்பன்

ஐயப்பன், ஸதானந்தன், பூத நாதன், சாஸ்தா என்னும்  திருநாமங்கள் கொண்ட கலியுகவரதன் சபரிமலையில் ஆலயம் கொண்டு அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்ததை கைலாசபதியாகிய பரமேஸ்வரன் காண விரும்புகிறார். அப்படியே விஷ்ணுவும் ஈஸ்வரனுக்கு  காட்சியளிக்க, அச்சந்திப்பினால் ஹரிஹரபுத்ரன் என்கிற ஐயப்பன் தேஜோ மயமாக மஹாவீர்ய வரநாக, ஞான சூர்யனாக அவதரித்தார். சாஸ்தா என்றால் திருத்திப் பணி கொள்ளும் சிறந்த ஆசிரியன் என்று பொருள் ஆகும்.

ஐயப்பன் பந்தள மன்னருக்கு தெய்வீகக் குழந்தையாக கிட்டி, பூலோகத்தில் பிறந்த பிரம்மச்சரியாகவும், யோகியாகவும் திகழ்ந்தார். பல அற்புதங்களை புரிந்து, பக்தர்களை காத்து  சபரிமலையில் காட்சி அளிக்கிறார். பூலோகத்தில் அவதரித்த  ஐயப்பன் குழந்தையாக குளத்துப் புழையிலும், பாலனாக ஆரியங்காவிலிலும், அரசனாக அச்சங்கோவிலிலும், கிராத புருஷ மூர்த்தியாக எரிமேலியிலும், தர்ம சாஸ்தாவாக சபரிமலையிலும் விற்றிருந்து மக்கள் துயரங்களை தீர்க்கும் பரமாத்மாவாக விளங்குகிறார். மாளிகைப் புரத்தின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்துக் காந்த மலையில் ஜோதிஸ்வரூபனாகத் தரிசனம் அளித்து மஹாசாஸ்தா என்று போற்றப்படுகிறார்.ஐயப்பனை பக்த கோடிகள் “சரணம் ஐயப்பா” என்று நமஸ்காரம் செய்வார்கள். பயபக்தி, ஆசாரம், பிரும்மச்சரியத்துடன் ஐயப்பனை வணங்க வேண்டும். சபரிமலை யாத்திரை செய்ய வேண்டியவர்கள் விரத வழிமுறைகளுடன் நோன்பிருந்து ஐயப்பனை அணுக வேண்டும்.

குடந்தை நடேசன்

சாஸ்தாவின் நமஸ்கார மந்திரங்கள்

1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

சுவாமியே சரணம் ஜயப்பா

லோகத்தில் தலை சிறந்த வீரரும், எல்லோராலும் பூஜிக்கப்படுபவரும், அனைத்தையும் காத்து, எங்கும் நிறைந்து, பார்வதிதேவியின் மனதிற்கு ஆனந்தம் அளிப்பவருமாகிய

 சாஸ்தாவை வணங்குகிறேன்.

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்

ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

சான்றோர்களால் பூஜிக்கப் படுபவரும், உலக மக்கள் அனைவராலும் வணங்கப்படு

பவரும், மஹாவிஷ்ணுக்கும், சிவ பெருமானுக்கும் மலர்ந்த அன்பு மைந்தனும், பக்தர்களுக்கு விரைந்து அருள் செய்பவரான  சாஸ்தாவை வணங்குகிறேன்.

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதங்கொண்ட யானைப்போல், வருபவரும், அன்பமுது ஒழுகும் திருக் கண்களை உடையவரும், எல்லா தடைகளை நீக்கும் தேவனான  சாஸ்தாவை வணங்குகிறேன்.

4. அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாசனம்

அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்களது குலதெய்வமாக வரும், பகைவர்களை அழிப்பவரும், எங்களது தேவைகளை அளிப்பவருமான  சாஸ்தாவை வணங்குகிறேன்.

5. பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம்

ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய அரசு குல திலகமும், கேரளத்தில் லீலா வினோதங்கள் புரிந்தவரும் ஆபத்தை காக்கும் மேலான தெய்வமுமாகிய  சாஸ்தாவை வணங்குகிறேன்.

6. பஞ்ச ரத்னாக்ய மேதத் யோ நித்யம் சுத்த: படேந்தர:

தஸ்ய ப்ரஸன்னோ பகவான் சாஸ்தா வஸதி மானஸ.

முதல் ஐந்து சுலோகங்களான இந்த பஞ்சரத்தினம் எனப்படும் எவன் தினமும் பரிசுத்தனாகப் படிக்கிறானோ, அவன் மீது மகிழ்ச்சி அடைந்து பகவான்  சாஸ்தா அவனது இதயத்தில் குடி கொண்டு இருப்பார்.

7. அருணோதய சங்காசம் நீலகுண்டல தாரிணம்

நீலாம்பரதரம் தேவம் வந்தேஹம் ப்ரஹ்ம நந்தனம்

சூரியனின் ஒளியுடையவரும், இந்திர நீல ரத்தினங்கள் பதித்த குண்டலங்களையும், நீல வஸ்த்திரத்தையும் அணிந்து, ஆனந்த வடிவினருமான என் தெய்வத்தை நான் வணங்குகிறேன்.

8. சாப பாணம் வாம ஹஸ்தே ரெளப்ய வேத்ரஞ்ச தக்ஷனே

விலஸத் குண்டல தரம் வந்தேஹம் விஷ்ணு நந்தனம்.

வில்லும் அம்பும் இடது கையிலும், வெள்ளிப் பிரம்பும் வலது கையில் கொண்டு

குண்டலங்களுடன் பிரகாசிப்பவரான, விஷ்ணுவின் பிரியகுமாரரை நான் வணங்குகிறேன்.

9. வ்யாக்ராருடம் ரக்த நேத்ரம் ஸ்வர்ண மாலா விபூஷணம்

வீரபட்ட தரம் கோரம் வந்தேஹம் சம்பு நந்தனம்.

வன்புலி வாகனரும், சிவந்த கண்களையுடையவரும், பொன்னால் செய்யப்பட்ட மாலை பூண்டவரும், வீரபட்டம் தரித்தவரும் (தீயோருக்கு) கொடியவருமான, சிவபிரானின் பிரிய குமாரரை நான் நமஸ்கரிக்கிறேன்.

10. கிங்கிண் யொட்யாண பூஷ்யேஹம் பூர்ணச் சந்த்ரணிபானனம்

கிராதருப சாஸ்தாரம் வந்தேஹம் பாண்ட்ய நந்தனம்

சலங்கைகளும், ஒட்டியாணமும் அணிந்தவரும், பெளர்ணமி நிலவு போல் முகம் உடையவரும், வேட உருவமெடுத்தவரும் பாண்டியனின் பிரிய குமாரருமான

 சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

11. பூத வேதாள ஸம்ஸேவ்யம் காஞ்சனாத்ரி நிவாஸினம்

மணி கண்ட மிதிக்யாதம் வந்தேஹம் சக்தி நந்தனம்

பூத, வேதாள கணங்களால் பணியப்படுபவரும், பொன்னம்பல மேட்டில்  வசிப்பவரும், மணிகண்டன் என்று போற்றுப்படுவருமாகிய சக்தி மைந்தனை நான் வணங்குகிறேன்.

12. ஒங்கார  மூர்த்தி மார்த்திக்னம் தேவம் ஹரிஹராத்மஜம்

சபரி பீட நிலயம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்.

ஒங்கார ருபனுமாகியவரும், இன்னல்களை களைப்பவரும், தெய்வமாக உள்ளவரும், ஹரிஹர புத்திரரும், சபரி பீடத்தில் இருப்பவருமாகிய  சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

13. நக்ஷத்ர நாத வதனம் நாதம் த்ரிபுவனாவனம்,

நௌமித சேஷ புவனம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்

சந்திரன் போன்ற முகம் உடையவரும், தலைவராய் மூன்று உலகத்தை காப்பவரும், புதியதாகப் படைக்கப்பட்ட உலகங்கள் அழியும் போது சாக்ஷியாக இருப்பவருமான சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

14. மன்மதாயுத செளந்தர்யம் மஹாபூத நிஷேவிதம்,

ம்ருகயா ரளிகம் ஸீரம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்.

பத்தாயிரக்கணக்கான மன்மதனின் அழகுடையவரும், மஹாபூதங்களால் ஆராதிக்கப்படுபவரும் வேட்டையாடுவதில் விருப்பமுடைய தேவனான  சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

15. சிவப்பரதாயினம் பக்த தைவதம் பாண்ட்ய பாலகம்,

சார்த்தூல துக்த ஹர்த்தாரம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்.

சிவபிரானால் அளிக்கப்பட்டவரும், பக்தர்களின் குல தெய்வமானவரும், பாண்டிய பாலகனும், புலிப்பால் கொண்டு வரச் சென்ற  சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

16. வாரணேந்திர ஸமாருடம் விச்வ த்ராண பராயணம்

வேத்ரோத்பாஸித கராம் போஜம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்

சிறந்த யானையின் மீது ஏறி வருபவரும், உலகத்தை காப்பவருமாகிய பிரம்பேந்திய தாமரைக் கையை உடைய  சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

17. யக்ஷிண்யைபிமதம் பூர்ணா புஷ்கலா பரிஸேவிதம்

க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

யக்ஷிணி தேவதைகளுக்குப் பிரியமானவரும், பூர்ணா புஷ்கலா தேவிகளால் ஸேவிக்கப்படுபவரும் பக்தர்களுக்கு விரைவில் அருளுபவருமான சாஸ்தாவை நான்

வணங்குகிறேன்.

18. த்ரயகம்ப புராதீசம் கணாதீப சமன் விதம்

கஜாருடம் அஹம் வந்தே சாஸ்தாரம் குலதைவதம்

த்ரயகம்ப புரத்தில் இருப்பவரும், கணபதிக்கு சமமானவரும், யானை மீது ஆரோஹ

கணித்து வரும் என் குல தெய்வமான சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

19. சிவவீர்ய ஸமுத்பூதம் நிவாஸ தனூத் பவம்

சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் குலதைவதம்.

சிவ வீரியத்தினால் நிவாசனின் கர்ப்பத்தில் உதித்தவரும், மயில் வாகனனை தம்பியாக உடையவரும் எங்கள் குலதெய்வமாகிய  சாஸ்தாவை வணங்குகிறேன்.

20. யஸ்த தன்வந்தரி மாதா பிதா ருத்ரோ பிஹக்தமஹ:

தம் சாஸ்தாரம் அஹம் வந்தே மஹா வைத்யம் தயாநிதிம்.

தன்வந்திரியாக அவதரித்த விஷ்ணுவை தாயாகவும், சிறந்த வைத்தியனான ருத்திரரைத் தந்தையாகவும் கொண்ட கருணாமூர்த்தியும் மஹா வைத்நாதனுமான  சாஸ்தாவை நான் வணங்குகிறேன்.

21. தம்ஷ்ட்ராகராஸ வதனம் தூமகேசோ திகம்பரம்

சதுர்புஜம் த்ரணயநம ஸ்மரேது பாஷாண தைவதம்.

கோரைப் பற்களுடைய முகம் உடையவரும், மேகம் போன்ற கேசமுடையவரும் திக்குகளை ஆடையாக உடுத்தவரும், நான்கு கைகள், மூன்று கண்கள் உடையவரும், சிலையுருவில் போற்றப்படுபவருமான  சாஸ்தாவை நினைவில் இருத்துகிறேன்.

22. பூத நாத சதானந்தா சர்வ பூத தயாபர

ரக்ஷ ரக்ஷ மஹோ பாேஹா சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

பூத நாதனும், நித்யானந்த ரூபனும், எல்லா உயிர்களிடத்தில் தயை உள்ளவரும், பெரும் தோளை உடையவருமான  சாஸ்தாவே, உங்களை வணங்குகிறேன்.

காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!

ஹரிவராஸனமும் தமிழ் விளக்கமும்

1. ஹரிவராஸனம் விச்வமோஹனம் ஹரிததீச்ராராத்ய  பாதுகம்

அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம் ஹரிஹராத்மஜம்  தேவமாச்ரயே

ச்ரேஷ்டமான அரியாசனத்தில் இருப்ப வரும், விஸ்வத்தைச் மோஹிக்கச் செய்பவரும், கதிரவனால் ஆராத்திக்கப்படும் சரணங்கள் உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நாள்தோறும் ஆனந்த நர்த்தனம் செய்பவரும் ஆகிய ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.

2. சரண கீர்த்தனம் சத்தமானஸம் பரணலோலுபம் நர்த்தனாலயம்

அருண பரசுரம் பூத நாயகம் ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரண கோஷத்தை கேட்கும் மனமும், லோகத்தை பாதுகாத்து நர்த்தன மிடுபவரும், காலை சூரியனின் சிவந்த ஒளியான காந்தி உடையவரும் பூத நாயகனுமாகிய ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.

3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம் ப்ரணத கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்

ப்ரணவ மந்திரம் கீர்த்தன ப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

ப்ரியமான ஸத்யகாவின் ப்ராண நாயகரும்,

சக்தி, திறமை உள்ளவரும். வணங்கி வரும் பக்தர்களுக்கு அருளை பேதமில்லாமல் கொடுப்பவரும், ஓம்காரத்தின் வாஸஸ்தலமும், இசையில் பிரியமும் உள்ள

வருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண்

அடைகிறேன்.

4. துரக வாஹனம் சுந்தரானனம் வரக

தாயுதம் தேவவர்ணிதம்

குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

குதிரை வாஹனரும், அழகிய தோற்ற

முடையவரும், சிறந்த கதாயுதம் ஏந்தியவரும்,

தேவர்களால் போற்றப்படுபவரும், கருவைப்போல அருள் செய்பவரும், இசையில் ப்ரியம் உடையவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.

5. த்ரிபுவனார்ச்சிதம் தேவாத்மாகம் த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்

த்ரிதச பூஜிதம் சிந்திதப்ரதம்  ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

மூன்று உலகத்தில் உள்ளவர்களால் அர்ச்சிக்கப்படுபவரும், ஸகல தேவ ஸ்வரூபமாகவரும், மூன்று கண்களுடையவரும், ப்ரபுவானவரும், சிறந்த குருவாகமும், முப்பத்து முக்கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும், நினைத்ததை உடனே அருள்பவருமான ஹரிஹர புத்ர

தேவனைச் சரண் அடைகிறேன்.

6. பவபயாபஹம் பாவுகாவகம் புவனமோ

ஹனம் பூதிபூஷணம்

தவள வாஹனம் திவ்ய வாரணம் ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

பவஸாகரத்தைப் பற்றிய பயத்தை நாசம் செய்பவரும், பக்தர்களுக்கு மங்களம் அளிப்பதில் பிதாவைப் போன்றவரும், உலகத்தை

தன்பால் மோஹிக்கச் செய்பவரும், விபூதி அணிந்தவரும், திவ்யமான வெள்ளை யானையை வாஹனமாக உடையவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.

7. களம்ருதுஸ்மிதம் ஸுந்தரானனம் களபகோமளம் காத்ர மோஹனம்

களப கேஸரி வாஜி வாஹனம் ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

மதுரமான, ம்ருதுவான மந்தஹாஸம் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்கவைக்கும் தேஹ முறையவரும், யானை, சிங்கம், குதிரை ஆகிய வாஹனங்கள் உடையவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.

8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம் ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்

ச்ருதி மனோஹரம் கீதலாலஸம் ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

தஞ்சமடைந்த மக்கள் மீது ப்ரியம் உடைய வரும், நினைத்ததை உடனேயே அளிப்பரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவாகவும், வேதங்களால் மனோஹரமானவராக வர்ணிக்கப்படுபவரும், கீதத்தில் பிரியமுள்ளவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.

புராணங்களில் வேதங்கள் ஐயப்பனின் காற் சிலம்புகளாகவும், சிலம் பொலி வேத கோஷமாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: