வேலு பிரபாகரன் இயக்கத்தில் மன்சூர் அலிகான்

சென்னை: சென்ற வருடம் மதுவுக்கு எதிராக ‘சரக்கு’ என்ற படத்தை எடுத்தார் மன்சூர் அலிகான். இப்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேலு பிரபாகரன் இயக்குகிறார். படத்துக்கு ‘யார் அந்த சார்’ என தலைப்பு வைத்துள்ளனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தந்து எதிர்பாராத திருப்பங்களுடன் படம் உருவாகிறது என்கிறது படக்குழு. மன்சூர் அலிகான், அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் நடிக்கிறார்கள். கதை, கலை, இயக்கம் வேலு பிரபாகரன். இசை மன்சூர் அலிகான், ஒளிப்பதிவு அகரன், எடிட்டிங் பார்த்திபன். சலாம் சினிமாஸ் சார்பில் சபூர் தயாரிக்கிறார்.

Related Stories: