சென்னை: சூப்பர்நேச்சுரல் திகில் ஜானரில் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி திரைக்கு வந்த படங்கள், ‘டிமான்ட்டி காலனி 1’, ‘டிமான்ட்டி காலனி 2’. இவ்விரு பாகங்களும் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றிபெற்றன. இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் ஹீரோ அருள்நிதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது.
இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், ‘கிரியேட்டிவ் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் படத்தை உருவாக்கினோம். அருள்நிதியின் கடுமையான உழைப்பு இப்படத்தின் மிகப்பெரிய நங்கூரம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை 3வது பாகம் கண்டிப்பாக நிறைவேற்றும்’ என்றார்.
அஜய் ஞானமுத்து கூறும்போது, ‘இக்கதையில் எந்தவித குறுக்கீடும் செய்யாமல், எங்களை சுதந்திரமாக பணிபுரிய வைத்த தயாரிப்பாளருக்கும், அருள்நிதிக்கும் நன்றி. 2 பாகங்களை விட இதில் அருள்நிதியின் நடிப்பை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்’ என்றார். மற்றும் பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார் நடித்துள்ளனர். வரும் கோடை விடுமுறையில் படம் வெளியாகிறது.
