சென்னை: சீயோன் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்துள்ள படம், ‘வித் லவ்’. இதில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஜோடி சேர்ந்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். கே.சுரேஷ் குமார் எடிட்டிங் செய்ய, ராஜ்கமல் அரங்கம் அமைத்துள்ளார். ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய மதன் எழுதி இயக்கியுள்ள ‘வித் லவ்’ படம், வரும் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருகிறது.
