சென்னை: அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பாளருக்கு இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் அனுப்பிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது: தனது பாடலை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியதற்காக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்க வேண்டும். 7 நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிலையில்தான் ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸின் ரவிசங்கர் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். அனுமதி வாங்கியாச்சு அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. எனவே நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.