ராட்சத எந்திரம் மூலம் பக்கிங்காம் கால்வாயில் ஆகாய தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது

தண்டையார்பேட்ைட: வரும் மழைக்காலத்துக்கு முன் அனைத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்அடிப்படையில், சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலம் 38, 41 ஆகிய வார்டுகளுக்கு  உட்பட்ட பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆகாய தாமரைகள் வளர்ந்து மழைநீர் செல்லாமலும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே,  ஆகாய தாமரைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ராட்சத மெஷின் மூலம் ஆகாய தாமரை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தொடங்கி வைத்தார். இதனால் தண்ணீர் தேங்காமல், கொசு உற்பத்தியாகாமல் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ‘’இந்த பணிகளை மழைக்காலம் வருவதற்கு முன்பு விரைந்து முடிக்க வேண்டும்’’ என்று ஒப்பந்ததாரர்களிடம்  மண்டல குழு தலைவர் கேட்டுக்கொண்டார்….

The post ராட்சத எந்திரம் மூலம் பக்கிங்காம் கால்வாயில் ஆகாய தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: