பொங்கல் பண்டிகை 2021 : பொங்கல் வைக்க சரியான நேரம்

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் முதலாவதாக இருக்கின்றது பொங்கல் பண்டிகை. இந்தாண்டு 2021 பொங்கல் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகின்றது. எந்த கிழமைகளில் வருகின்றது, எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கின்றது உள்ளிட்ட விபரங்களை இங்கு முழுமையாகப் பார்ப்போம்...

2021 ஜனவரி 13 (மார்கழி 29) புதன் கிழமை - போகிப் பண்டிகை

ஜனவரி 14 (தை 1) வியாழக்கிழமை - தை பொங்கல்

ஜனவரி 15 (தை 2) வெள்ளிக் கிழமை - மாட்டுப் பொங்கல்

ஜனவரி 16 (தை 3) சனிக்கிழமை - உழவர் திருநாள், காணும் பொங்கல்

ஜனவரி 17(தை 4) ஞாயிற்றுக்கிழமை - வார விடுமுறை

இந்தாண்டு 2021ல் பொங்கல் பண்டிகை புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் வருகிறது.

தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது

பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

Related Stories: