ரூ.10 கோடி காரை வாங்கிய நடிகை ஊர்வசி ரவுட்டேலா

மும்பை, மார்ச் 12: பாலிவுட்டில் நடித்து வரும் ஊர்வசி ரவுட்டேலா, தமிழில் ‘லெஜன்ட்’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் நடிக்கிறார். இவர் அவ்வப்போது தனது ஆடம்பர செலவுகள் காரணமாக, செய்தியில் அடிபடுகிறார். கடந்த ஆண்டு தனது பிறந்த நாளில் தங்கத்திலான கேக்கை வெட்டினார். இந்த ஆண்டு பிறந்த நாளில் வைரத்திலான ஆடையை அணிந்து வந்தார். இந்நிலையில் இப்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதன் விலை ரூ.10 கோடியே 50 லட்சமாகும். இந்த காரை வைத்திருக்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையும் இதன் மூலம் ஊர்வசி பெற்றுள்ளார். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் கூட இந்த காரை வைத்துக்கொள்ளவில்லை. அதே சமயம், குறைந்த படங்களிலேயே நடித்திருக்கும் ஊர்வசிக்கு இதுபோல் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Stories: