மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு; சிறைக்குள் இருந்து அனுப்பினார் சுகேஷ் சந்திரசேகர்

புதுடெல்லி: நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதல் கடிதம் எழுதினார். மேலும், தனது சிறப்பு பரிசாக விலையுயர்ந்த ஒரு ஜெட் விமானத்தையும் வழங்கினார். ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தில், ‘உன் பெயரின் முதல் எழுத்துகள் ஜேஎஃப் உடன் ஒரு கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட் விமானம் அனுப்பியுள்ளேன். உன் பிறந்த மாதம், வருடத்தின் அடிப்படை யில் ஜெட் விமானத்தின் பதிவு எண் இருக்கும். நீ எப்போதுமே உன் வேலைகளுக்காக உலகம் முழுவதும் பறக்கிறாய். இப்போது இந்த ஜெட் விமானத்துடன் உன் பயணம் மிகவும் எளிதாகிவிடும்’ என்று, உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015 முதல் மோசடி வழக்கில் சிறையிலேயே இருக்கிறார், சுகேஷ் சந்திரசேகர். இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ​​சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உறவு பற்றிய விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

Related Stories: