சென்னை, மார்ச் 20: மும்பையில் உள்ள தனது வீடுகளை ரூ.14.80 கோடிக்கு பிரபு தேவா விற்றுள்ளார். பிரபுதேவாவுக்கு சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் சொந்தமாக வீடுகள் உள்ளன. இந்தியில் தொடர்ந்து சில படங்களை அவர் இயக்கினார். அப்போது தெற்கு மும்பையில் மகாலட்சுமி பகுதியில் பிரமாண்ட அபார்ட்மென்ட்டில் பிரபு தேவா இரண்டு வீடுகளை வாங்கியிருந்தார். 2012ம் ஆண்டு வாங்கிய இந்த வீடுகளை இப்போது அவர் ரூ.14.80 கோடிக்கு விற்றிருக்கிறார். தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, நடன நிகழ்ச்சிகள், படங்களுக்கு நடனம் அமைப்பது என பிசியாக உள்ளார். திடீரென அவர் வீடுகளை விற்றது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
