யோகி பாபு நடித்துள்ள 300வது படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தின் டீசரை இயக்குனரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். தேவ் சினிமாஸ் பி.லிட் சார்பில் கிருத்திகா தங்கபாண்டி.எஸ் தயாரிப்பில், ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த டீசரில், தனது வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக தோன்றுகிறார் யோகி பாபு. தனது வண்டியை மீட்க அவர் போராடுவதும், அந்த வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதுமாக, பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீசர் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இப்படம் வெளியான பின்பு, பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நடக்கும் மிகப்பெரிய மோசடிகள் மக்களுக்கு துல்லியமாக தெரியவரும் என்று, படக்குழு தெரிவித்தது. ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குனர் லெனின் பாரதியிடம் ரா.ராஜ்மோகன் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். முக்கிய வேடங்களில் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், ‘அயலி’ மதன், சுப்பிரமணியம் சிவா, லெனின் பாரதி, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார் நடித்துள்ளனர்.
‘தண்டகாரண்யம்’ பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்ய, ‘அமரன்’ சேகர் அரங்கம் அமைக்க, ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி அளிக்க, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். எல்.சுந்தரபாண்டி இணை தயாரிப்பு செய்ய, எம்.ஆர்.அருண் சந்தர் வசனம் எழுதியுள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
