மீண்டும் ஹீரோ ஆனார் ஆனந்த் பாபு

சென்னை: சிசிசி பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் லைப் பைலட் என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி படத்தை தயாரித்தும் இருக்கிறார் சைதன்யா சங்கரன். இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக ஆனந்தபாபு நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஜிதா அறிமுகமாகி நடித்திருக்கிறார். மற்றும் மகாநதி சங்கர், தீபக் நம்பியார், சூர்யா, சோனியா , அனுபிரென்சி மற்றும் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சைதன்யா சங்கரன் கூறும்போது, ‘‘இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிஜத்தை பிரதிபலிக்கும் படமாக இது இருக்கும்’’ என்றார். ஒளிப்பதிவு – ஜான் விக்டர். இசை – பாலசந்திரன். எடிட்டிங் – ஆர்.சி பிரசன்னா. சண்டை பயிற்சி – ஜஸ்டின் ரவி. டான்ஸ் – மாரி மனோஜ். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Related Stories: