ஸ்ருதிஹாசன் கருத்தை காப்பியடித்த ஐஸ்வர்யா

பல்வேறு ெமாழிகளில் நடித்து வரும் நிஜ டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமி, சமீபகாலமாக தனது சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமண உறவு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு கிடையாது. உடனே நான் திருமண பந்தத்துக்கு எதிரி என்று முடிவு செய்துவிடாதீர்கள். வாழ்க்கை துணை என்று ஒருவர் வேண்டும்தான்.

ஆனால், இரண்டு பேரும் இணைந்து வாழும்போது, இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அதனால்தான் சொல்கிறேன், திருமணம் செய்துகொள்ளாமல், கடைசிவரை ஒரு பந்தத்திலேயே இருப்பது நல்லது’ என்று தெரிவித்துள்ளார். இதே கருத்தை ஸ்ருதிஹாசன் அடிக்கடி சொல்லி வருகிறார். இதை அப்படியே ஐஸ்வர்யா லட்சுமி காப்பியடித்துள்ளார்.

Related Stories: