ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ், வேம் இண்டியா சார்பில் அனீஸ் அர்ஜூன் தேவ் இணைந்து தயாரித்துள்ளனர். பிவிஆர் நிறுவனம் வெளியிடுகிறது. தீபக்குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி பா.விஜய் கூறுகையில், ‘கடந்த 2015ல் ‘ஸ்ட்ராபெரி’, 2018ல் ‘ஆருத்ரா’ ஆகிய படங்களை இயக்கி நடித்தேன். தற்போது ‘அகத்தியா’ படத்தை 6 வயது முதல் அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளேன்’ என்றார். ஜீவா கூறும்போது, ‘சிறு வயது ரசிகர்கள் என்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதில் நடித்தேன். காரணம், இப்படத்தின் கதை. ஒன்றரை மணி நேரம் இடம்பெறும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு பல கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. நிஜமாகவே இப்படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாததாக இருக்கும்’ என்றார்.
