26, 28ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கிருஷ்ணசமுத்திரம்  கிராமத்தில் வருகின்ற 26 ஆம் தேதியும், திருவள்ளூர் வட்டம், பூண்டி கிராமத்தில் வருகின்ற 28 ஆம் தேதியும் காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்துத் துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

The post 26, 28ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: