கரூர் அருகே நடந்த துணிகர சம்பவம் கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது-தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

கரூர் : கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அதிகாலை 4 மணியளவில் வெள்ளியணை அடுத்துள்ள அய்யம்பாளையம் பிரிவு அருகே வெங்கமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25) மற்றும் இவரின் தாத்தா பொன்னுச்சாமி(72) ஆகிய இருவரும் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டிக்கு கோழி சந்தையில், கோழி வாங்க பைக்கில் சென்றனர். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் பைக்கை வழிமறித்து, அவர்களிடம் இருந்து ரூ. 14 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், கரூர் டிஎஸ்பி தேவராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.கடந்த 7ம்தேதி போலீசார் வெள்ளியணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியின் வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, காரில் இருந்த கரூரைச் சேர்ந்த துரைப்பாண்டி, மணிகண்டன், பரத், முகேஸ், முருகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, கோழி வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் மற்றும் கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பாராட்டினார்….

The post கரூர் அருகே நடந்த துணிகர சம்பவம் கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது-தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: