இந்த வாரம் என்ன விசேஷம்?

பிப்ரவரி 29, சனி: சஷ்டி விரதம். பெருவயல் முருகப்பெருமான் மேஷ வாகனத்தில் பவனி. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில்

திருவீதியுலா.
Advertising
Advertising

மார்ச் 1, ஞாயிறு :  சஷ்டி. கார்த்திகை.  காங்கேயம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி.

மார்ச் 2, திங்கள்: காரமடை அரங்கநாதர் உற்சவாரம்பம். நத்தம் மாரியம்மன் பவனி. வேதாரண்யம் சிவபெருமான் பவனி.  முருகப்பெருமான் சேஷ

வாகனத்தில் திருவீதியுலா.

மார்ச் 3, செவ்வாய்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் திருவீதியுலா.  திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திரம். திருச்சி நாகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் 63 பேர்க்கு காட்சி கொடுத்தல்.

மார்ச் 4, புதன் : திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி. கோயம்புத்தூர் கோனியம்மன் தேரோட்டம்.  திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேரோட்டம். திருச்சி நாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம். காஞ்சி சுந்தரமூர்த்தி நாயனார் கண்பெற்ற நாள். காஞ்சி தேவராஜஸ்வாமி தென்னேரி தெப்பல், நுங்கம்பாக்கம்  சீதாராம சுவாமிகள் ஜெயந்தி.

 

மார்ச் 5, வியாழன்: ஸ்மார்த்த ஏகாதசி. குலசேகராழ்வார். காஞ்சி ஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம்.

மார்ச் 6, வெள்ளி: ஏகாதசி. காரமடை அரங்கநாதர் திருகல்யாண வைபவம். வைஷ்ணவ ஏகாதசி. ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை இன்று வைணவப் பெரியோர்கள் அருள் பெற  பெரியாழ்வார் மூல மந்திர ஹோமம்.

Related Stories: