பெரியார் என சர்ச்சை பேச்சு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவு: கைது செய்ய போலீஸ் தேடுதல் வேட்டை

சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டம் கடந்த 31ம் தேதி நடந்தது. கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரான சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,‘ ரங்கம் கோயில் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துகளின் எழுச்சி நாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சார்பில், சர்ச்சைக்குரிய வீடியோ ஆதாரத்துடன், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நேற்று முன்தினம் புகார் அளித்தார்.  இந்த புகாரின் மீது,  கனல் கண்ணன் மீது கலவரத்தை தூண்டுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார்….

The post பெரியார் என சர்ச்சை பேச்சு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவு: கைது செய்ய போலீஸ் தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: