விடாமுயற்சி படத்துக்காக 102 டிகிரி காய்ச்சலுடன் டான்ஸ் ஆடிய அஜித்

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா கெசன்ட்ரா நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சவுதீகா’ வெளியாகி, ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. அஜித் குமாரின் நடன அசைவுகள் சோஷியல் மீடியாவில் ஸ்டெப் பை ஸ்டெப் ஆக பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இதுகுறித்து அஜித் குமாரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் கல்யாண் கூறுகையில், ‘‘தமிழில் ‘துணிவு’ படத்துக்குப் பிறகு ‘விடாமுயற்சி’ படம் ரிலீசாவதால், அஜித் குமாரின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். அதுவும் அஜித் குமார் வேஷ்டி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடுவதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவுதீகா’ பாடல் என்பது கோட், சூட் போட்டுக்கொண்டு வரும் கிளாஸியான பாடல். டான்ஸ் ஸ்டெப் எல்லாம் ஸ்லோவாக இருப்பதால், ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று சிறிது தயக்கமாக இருந்தது. ஆனால், இப்பாடலுக்கு இப்படியொரு வரவேற்பும், கொண்டாட்டமும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இப்பாடல் காட்சியை தாய்லாந்தில் நான்கு நாட்கள் படமாக்கினோம். உடல்நிலை சரியில்லை என்றாலும், தன்னால் ஷூட்டிங் பாதிக்கக்கூடாது என்று அஜித் குமார் கஷ்டப்பட்டு நடித்தார். ‘சவுதீகா’ பாடலுக்கு ஆடியபோது, அஜித் குமாருக்கு 102 டிகிரி காய்ச்சல். தொடர்ந்து இருமல் ஏற்பட்டிருந்த நிலையில், ஆன்டி பயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, அதே காய்ச்சலுடன் நடனமாடி அசத்தினார்’’ என்றார்.

Related Stories: