இந்த வாரம் என்ன விசேஷம்?

நவம்பர் 09, சனி -  சுக்லபட்ச மஹாபிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி.  சிலுகதுவாதசி, க்ஷீராப்திநாதபூஜை, ஸ்ரீ யாக்ஞவல்கிய ஜயந்தி. சிவாலயங்களிலும்  இன்று மாலை ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம்.

Advertising
Advertising

நவம்பர் 10, ஞாயிறு - திருகோஷ்டியூர் ஸ்ரீ  சௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

நவம்பர் 11, திங்கள் - கீழ்த்திருப்பதி ஸ்ரீ  கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

நவம்பர் 12, செவ்வாய் - பௌர்ணமி, அன்னாபிஷேகம்,  திருமூலர். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் அன்னாபிஷேகம், காஞ்சி ஸ்ரீ கச்சிமயானேஸ்வரர் மஹா அன்னாபிஷேகம். நெடுமாறனார் திரு நட்சத்திரம். கார்த்திக கௌரி விரதம். கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் அன்னக்கூடை உற்சவம், திருவஹிந்திரபுரம் ஸ்ரீ  தேவநாத சுவாமி டோலோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ  முருகப்பெருமான் அபிஷேக ஆராதனை விழா. குரங்கணி ஸ்ரீ  முத்துமாலையம்மன் பவனி. குருநாணக் ஜெயந்தி.

நவம்பர் 13, புதன் - கார்த்திகை பஹூள பிரதமை,(இடங்கழியார்). கிருத்திகை விரதம். சுவாமிமலை, விராலிமலை இத்தலங்களில் ஸ்ரீ  முருகப்பெருமான் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் தங்கரத காட்சி.  

நவம்பர் 14, வியாழன் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

 

நவம்பர் 15, வெள்ளி -  திருவஹிந்திரபுரம் ஸ்ரீ சுவாமி தேசிகர் டோலோற்சவம். சங்கடஹரசதுர்த்தி. ஸ்ரீ  கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

Related Stories: