ஜனவரியில் திரிஷா படங்கள் ரிலீஸ்

திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ் நடித்த ‘ஏஆர்எம்’ என்ற படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், அடுத்து அவரது நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம், ‘ஐடென்டிட்டி’. திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அகில் பால், அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். விநய் ராய், மந்திராபேடி, ஷம்மி திலகன், அஜூ வர்கீஸ், அர்ஜூன் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. திரிஷாவுக்கு தமிழில் அஜித் குமார் ஜோடியாக நடித்துள்ள ‘விடாமுயற்சி’ என்ற படமும் வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.

Related Stories: