ஐதராபாத்: நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, தெலுங்கில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். தமிழில் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரான ‘கஸ்டடி’ படத்தில் நடித்தார். நாக சைத்தன்யா படத்தை தாண்டி இப்போது அவரது திருமண விஷயங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
தனது மகன் நான சைத்தன்யாவின் திருமணத்துக்கு பரிசாக நாகர்ஜுனா லெக்சாஸ் எல்.எம்.எம்பி வி ரக காரை வழங்குகிறார். இந்தக் காரின் விலை ரூ2 கோடியே 15 லட்சமாம். பதிவு வரிகள் அனைத்தும் சேர்த்து காரின் மொத்த விலை ரூ2 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது.