சில்க் ஸ்மிதா வாழ்க்கை தமிழில் படமாகிறது

சென்னை: மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சில்க் ஸ்மிதா – குயின் ஆஃப் சவுத் திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும் என்கிறது படக்குழு. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சந்திரிகா ரவி நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், எஸ்டிஆர்ஐ நிறுவனம் சார்பில் எஸ்.பி. விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. சில்க் ஸ்மிதா பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் இவரது வாழ்க்கை ‘தி டர்ட்டி பிக்சர்’ பெயரில் இந்தியில் படமானது. அதில் வித்யா பாலன் நடித்திருந்தார்.

Related Stories: