கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம், அனுமதி பெறாமல் போராட்டங்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை பாயும்: எஸ்.பி. எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு உரிய விசாரணை கேட்டு அனுமதி இன்றி அமைதி பேரணிக்கு முகநூலில் அழைப்பு விடுத்த 3 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் நகராட்சி துறை மங்கலத்தில் 8 வது வாடு செயலாளராக உள்ளவர் சூர்யா , 9 வது வாடு செயலாளராக உள்ளவர் தீபக், மற்றும் கம்பம் தெருவில் வசிக்கும் சுபாஷ் உள்ளிட்ட மூன்று பேரும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதி பேரணி நடத்துவதற்கு அழைப்பு விடுத்து முகநூலில் பதவிட்டதாக தெரிகிறது. வன்முறை வெடித்து, சர்ச்சை நீடித்து வரும் நிலையில் இந்த பதிவால் மேலும் கலவர சூழல் உருவாகும் என்பதால் அவர்கள் மூவரையும் விசாரணைக்கு அழைத்து வந்த போலீசார் கைது செய்து, இன்று அதிகாலை நீதிபதி முன் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று உரிய அனுமதி பெறாமல் அழைக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை பாயும் என்று பெரம்பலூர் எஸ்.பி. மணி சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். …

The post கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம், அனுமதி பெறாமல் போராட்டங்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை பாயும்: எஸ்.பி. எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: