தமிழில் அறிமுகமாகும் பாம்பே ஜெயஸ்ரீ மகன்

 

சென்னை: வினீத் சினிவாசன் இயக்கிய ‘வருஷங்களுக்கு சேஷம்’ படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அம்ரித் ராம்நாத். இவர், பாம்பே ஜெயஸ்ரீயின் மகன். இப்போது தமிழில் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார். அவர் கூறியது: இசைக் குடும்பம் என்பதால் சிறு வயது முதலே இசைக் கற்றேன். பாடுவதில்தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தேன். பிறகு கிளாசிக், வெஸ்டர்ன் இசைகளையும் கற்றேன். நிறைய இசைக் கச்சேரிகள் நடத்தியிருக்கிறேன். எனது தனி இசை ஆல்பங்களை கேட்ட வினீத் சீனிவாசன், ‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தில் பணியாற்ற அழைத்தார்.

அப்படித்தான் அந்த படத்துக்கு இசையமைத்தேன். இதில் இடம்பெற்ற ‘ஞாபகம்’ என்ற பாடல் உலக அளவில் பிரபலமானது. அந்த படத்தில் பணியாற்றியபோது, அம்மாவுக்கு உடல் நலம் பாதித்தது. லண்டனில் இசைக் கச்சேரிக்கு சென்றவர், அங்கேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு இடையே மருத்துவமனையில் இருந்தபடி அவர் எழுதிய பாடல்தான் ‘ஞாபகம்’. எனது முதல் பட இசையை கேட்டு விட்டு அம்மா பாராட்டினார். சாதனையாளரின் மகனாக இருப்பது எனக்கு அழுத்தம் தருமா எனக் கேட்கிறீர்கள். கண்டிப்பாக கிடையாது. அது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். சித்தார்த், இயக்குனர் ஸ்ரீகணேஷ், தயாரிப்பாளர் அருண் இணையும் படத்திலும் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த படத்தை எதிர்பார்க்கிறேன்.

The post தமிழில் அறிமுகமாகும் பாம்பே ஜெயஸ்ரீ மகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: