திருவனந்தபுரம்: முன்னாள் மனைவி அளித்த புகாரில் பிரபல நடிகர் பாலாவை போலீசார் கைது செய்தனர். பிரபல தமிழ் டைரக்டர் ‘சிறுத்தை’ சிவாவின் தம்பி நடிகர் பாலா. தமிழில் ‘கலிங்கா’, ‘வீரம்’ உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மலையாளத்தில் ‘களபம்’, ‘புதிய முகம்’, ‘புலி முருகன்’, ‘முசாபிர்’, ‘லூசிபர்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகியான அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். அதன் பிறகு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எலிசபெத் என்பவரை 2வது திருமணம் செய்தார். பின்னர் அவரையும் பாலா பிரிந்து விட்டார். இந்தநிலையில் தனக்கும், மகளுக்கும் எதிராக பாலா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பவதாக அமிர்தா சுரேஷ் கொச்சி போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை கடவந்திரா போலீஸ் நடிகர் பாலாவை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது.
The post முன்னாள் மனைவி புகார் நடிகர் பாலா கைது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
