சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ள படம், ‘ஒன்ஸ்மோர்’. மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தெலுங்கில் ‘குஷி’, ‘ஹாய் நன்னா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்கமல் அரங்குகள் அமைக்க, யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, விஜய், சிம்ரன் நடிப்பில் கடந்த 1997ல் வெளியான ‘ஒன்ஸ்மோர்’ படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பு தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை.
The post அர்ஜுன் தாஸ் அதிதி ஷங்கர் நடிக்கும் ஒன்ஸ்மோர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.