பட விழாவை புறக்கணித்த ஷெரின், சம்யுக்தா: இயக்குனர் வெங்கடேஷ் புகார்

சென்னை: கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ள படம் தில் ராஜா. விஜய் சத்யா, ஷெரீன், சம்யுக்தா நடித்துள்ளனர். வருகிற 27 ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் விழாவில் இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது: இப்படத்தில் ஹீரோயின்களாக ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட, உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள். நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன். வரவில்லை. இது தான் சினிமா. விஜய் சத்யா ஒரு நாள் கூப்பிட்டு, கதை சொன்னார் என் கருத்தைக்களை சொன்னேன்.

சார் நீங்க தான் டைரக்ட் பண்ணனும் என்றார். என் ஸ்டைலில் இல்லையே எனத் தயங்கினேன் ஆனால் நீங்கள் தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள் என்றார். மகிழ்ச்சியுடன் ஓகே சொன்னேன். எந்தப் பிரச்னை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் படத்தின் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இப்பட இசையமைப்பாளர் அம்ரீஷ் உடன் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் பொறுமையாக மிக அழகாகப் பாடல்கள் தந்துள்ளார். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

The post பட விழாவை புறக்கணித்த ஷெரின், சம்யுக்தா: இயக்குனர் வெங்கடேஷ் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: