மலேசியா ஓபன் பேட்மின்டன் இன்று ஆரம்பம்

கோலாலம்பூர்: ஸ்ரீகாந்த், சிந்து உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்கும் பெட்ரோனாஸ் மலேசியா ஓபன்  போட்மின்டன் போட்டி இன்று கோலாலம்பூரில் தொடங்குகிறது. ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில் சீனா, ஜப்பான், சீன தைபே, தாய்லாந்து, டென்மார்க், இந்தோனேசியா, மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், கிடாம்பி காந்த், சமீர் வர்மா,  லக்‌ஷயா சென் ஆகியோரும்,  மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும் விளையாட உள்ளனர்.   ஆடவர் இரட்டையர் பிரிவில்   சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணையும்,  மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை, ஹரிதா-அஷ்னா இணை, அஷ்வினி பட்-ஷிகா இணையும்  பங்கேற்கும். மற்றொரு இந்திய வீராங்கனை வித்யா, மலேசிய வீராங்னை  இஷிகா உடன் இரட்டையர் பிரிவில் விளையாடுவார். கலப்பு இரட்டையர் பிரிவில்   வெங்கட் கவுரவ்-ஜூஹி,  சுமீத்-அஸ்வினி பொன்னப்பா  ஆகியோர்  களமிறங்க  உள்ளனர். தாமஸ், ஊபர் கோப்பைகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அசத்திய பிறகு பேட்மின்டன் போட்டிகள் மீது நாட்டில்  பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது….

The post மலேசியா ஓபன் பேட்மின்டன் இன்று ஆரம்பம் appeared first on Dinakaran.

Related Stories: