சென்னை: அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ படம், கடந்த 11 நாட்களில் ரூ.31 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய படம், ‘டிமான்ட்டி காலனி’. இதன் 2ம் பாகமாக ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற படம், கடந்த 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் நடித்தனர்.
இப்படத்தையும் அஜய் ஞானமுத்துவே இயக்கினார். சாம் சி.எஸ் இசை அமைத்தார். பிடிஜி யுனிவர்சல், ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஞானமுத்து பட்டறை இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரிலீசான 11 நாட்களில் ரூ.31 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
அதனால், செலவான தொகையில் இருந்து இருமடங்கு வசூலித்துள்ளது. இப்படம் 11வது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் ரூ.3.20 கோடி வசூலித்தது. தொடர்ந்து சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, இந்தி சாட்டிலைட் டப்பிங் உரிமை ஆகியவற்றால் பெரும் தொகை கிடைக்கும் என்று, டிரேட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 ரூ.31 கோடி வசூல் வேட்டை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.