சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் தமிழ், தெலுங்கில் வெற்றிபெற்றுள்ளது. வரும் 30ம் தேதி இந்தி, கன்னடத்தில் திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த இப்படத்தின் வெற்றிவிழாவில் விக்ரம் பேசியதாவது:தங்கம் தேடும் பயணத்தில் நாங்கள் நடிக்கவில்லை. அப்பகுதி மக்களாகவே மாறினோம். வெயில், மழை, குளிருக்கு நடுவில் நடித்தோம். முடிவில் தங்கத்தைக் கண்டுபிடித்தோம். அதுதான் இப்படத்தின் வெற்றி. கதை சொல்ல வந்த பா.ரஞ்சித், பாதி தலையை மொட்டையடிக்கச் சொன்னார்.
பிறகு கோவணம் கட்டச் சொன்னார். எந்த மெயின் ஸ்ட்ரீம் ஹீரோவும் இதைச் செய்ய மாட்டார். இது எப்படி திரையில் தெரியும் என்று ஒருபுறம் பயமாகவும், மறுபுறம் ஆர்வமாகவும் இருந்தது. பா.ரஞ்சித் என்னை ஆதாமாக நடிக்கச் சொன்னால் கூட தயங்காமல் நடிப்பேன். அந்த பலம் எனக்குள் இருக்கிறது. என்னுடன் பணியாற்றிய சில இயக்குனர்கள் என்ன சொன்னாலும் அதை நம்பிச் செய்துவிடுவேன். பா.ரஞ்சித் இல்லாமல் தங்கலான் கதாபாத்திரத்தை என்னால் இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது. அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படமும் நன்றாக ஓடுகிறது. அதற்காக அருள்நிதி மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்.
The post பா.ரஞ்சித் கேட்டால் ஆதாம் வேடத்திலும் நடிப்பேன்: விக்ரம் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
