போட்டோ லீக் யஷ் படக்குழுவுக்கு திடீர் கட்டுப்பாடு

பெங்களூரு: மலையாள நடிகையும், தமிழில் ‘நள தமயந்தி’ என்ற படத்தில் நடித்தவருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் பான் இந்தியா படம், ‘தி டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில் நடந்து வருகிறது.

இதில் யஷ் பங்கேற்ற காட்சி ஒன்றின் போட்டோ சமூக வலைத்தளங்களில் கசிந்தது. இதையறிந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த போட்டோவில் யஷ் அருகில் ஹூமா குரேஷி நின்று கொண்டிருக்கிறார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்தாலும், இந்த போட்டோ கசிந்தது குறித்து படக்குழுவினரிடம் தயாரிப்பு தரப்பு விசாரித்து வருகிறது. குறைந்த ஆட்களை படப்பிடிப்பில் பயன்படுத்தவும், அவர்கள் செல்போன்களை படப்பிடிப்பு அரங்கிற்குள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

The post போட்டோ லீக் யஷ் படக்குழுவுக்கு திடீர் கட்டுப்பாடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: