திருப்பதி கோயிலில் தை மாத பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை: திருப்பதி கோயிலில் தை மாத பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாளில் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வருவது வழக்கம்.

அதன்படி, தை மாத பவுர்ணமியான நேற்று இரவு தங்கம், வைரம், வைடூரியத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் நான்கு மாடவீதியில் இருப்புறமும் காத்திருந்து, கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு மனம் உருகி வேண்டி கொண்டனர். இதில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், பேஸ்கார் ரமேஷ் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: